
Iran media Reports Capture of Unmanned Submarine: நீர்மூழ்கி கப்பலை கைப்பற்றி இருப்பதாக ஈரானிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
சிறைபிடிக்கப்பட்ட ஆளில்லா நீர்மூழ்கி கப்பல்?
ஈரானின் புரட்சிகர காவல் படையினரின் தகவலில், ஹார்முஸ் ஜலசந்தியில் வைத்து ஆளில்லா நீர்முழ்கி கப்பல் ஒன்று தடுத்து நிறுத்தப்பட்டு கைப்பற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஈரானிய இராணுவத்தின் கூற்றுப்படி இந்த ஆளில்லா நீர்மூழ்கி கப்பலானது ஆண்டுரில்(Anduril) நிறுவனத்தின் 'Dive LD' என்ற தன்னாட்சி நீர்மூழ்கி கப்பல் என தெரியவந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை ஈரானிய அரசு ஊடகமான IRNA மற்றும் பல செய்தி நிறுவனங்களும் ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் ஒன்றின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு இருந்தன.
IRGC வெளியிட்ட காட்சிகளில், நீர்மூழ்கி கப்பல் எந்தவொரு சேதமும், பாதிப்புகளும் இல்லாமல் நல்ல நிலையில் இருப்பதை பார்க்க முடிந்தது.
Dive LD நீர்மூழ்கி கப்பல் கைப்பற்றப்பட்டது மட்டும் உறுதிப்படுத்தப்பட்டால் அதிநவீன ஆளில்லா நீர்மூழ்கி கப்பல் ஒன்றை நாடு ஒன்று கைப்பற்றும் முதல் சம்பவம் இதுவாகும்.
ஈரானிய ராணுவம் மற்றும் ஊடகங்கள் இது தொடர்பான செய்தியை தீவிரமாக அறிவித்து வரும் நிலையில், இது தொடர்பாக அமெரிக்கா எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments: