செவிப்புல குறைபாடுடையோரும் 119 க்கு முறையிடலாம்
செவிப்புலன் குறைபாடுடைய சமூகத்தினரின் உரிமைகளைப் பாதுகாத்தல் மற்றும் அவர்களுக்கான வசதிகளை விரிவுபடுத்தும் நடவடிக்கையாக, 119 பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுக்கு WhatsApp சமூக வலைத்தளத்தின் ஊடாக காணொளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்கும் விசேட திட்டம் ஜனாதிபதியால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் 2026.09.10 முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. 160ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு இத்திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.,
செவிப்புலன் குறைபாடுடைய சமூகத்தினர் 119 பொலிஸ் அவசர அழைப்பு பிரிவுடன் தொடர்புகொண்டு முறைப்பாடுகளைச் சமர்ப்பிப்பதற்கான குறுந்தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்படும் வரை, பின்வரும் படிமுறைகளைப் பின்பற்றித் தமது முறைப்பாடுகளைச் சமர்ப்பிக்க முடியும்:
முறைப்பாட்டைச் சமர்ப்பிக்கும் முறைமை:
முதலில் 011-2809980 என்ற தொலைபேசி இலக்கத்தை உங்கள் தொலைபேசியில் சேமித்துக்கொள்ளவும்.
பின்னர் WhatsApp ஊடாக குறித்த இலக்கத்திற்கு ஒலி அழைப்பை (Audio Call) மேற்கொள்ளவும்.
அதன் பின்னர் குறித்த ஒலி அழைப்பு துண்டிக்கப்பட்டு, உங்கள் தொலைபேசிக்கு ஒரு Link (இணைப்பு) அனுப்பப்படும்.
குறித்த Link ஊடாக மீண்டும் WhatsApp-க்கு பிரவேசிக்கவும்.
அங்கு காணப்படும் "Join Browser" என்பதை அழுத்தி, பின்னர் "Join Meeting" என்பதற்குள் பிரவேசிக்கவும்.
இச்செயன்முறையைத் தொடர்ந்து காணொளி அழைப்புடன் இணைந்து, தமது முறைப்பாட்டைச் சமர்ப்பிப்பதற்கான வசதி ஏற்படுத்தப்படும்.
செவிப்புலன் குறைபாடுடைய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் வசதிக்காகவே நிறுவப்பட்டுள்ள இவ்விசேட சேவை தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது
9/09/2026 06:49:00 AM
செவிப்புல குறைபாடுடையோரும் 119 க்கு முறையிடலாம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments: