News Just In

8/07/2026 09:13:00 AM

மெகசின் சிறைச்சாலை பதற்றமான சூழ்நிலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது – நீதி அமைச்சர் !

மெகசின் சிறைச்சாலை பதற்றமான சூழ்நிலை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது – நீதி அமைச்சர் !




கொழும்பு புதிய மெகசின் சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை தற்போது முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இச்சம்பவத்திற்கு பின்னணியில் இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் சுமார் பத்து கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறைச்சாலையின் மதிலுக்கு மேலிருந்து உட்புறத்திற்கு வீசப்பட்ட சிறிய பொதியொன்றை சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கைப்பற்றியதையடுத்து, ஒரு குழுவினர் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

அதன் பின்னர், சிறைக் கூடத்தின் பூட்டுகளை உடைத்து 40க்கும் மேற்பட்ட கைதிகள் வெளியே வந்துள்ள நிலையில், சிறைச்சாலை அதிகாரிகள், பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் இணைந்து நிலைமையைக் கட்டுப்படுத்தி, அவர்களை மீண்டும் சிறைக் கூடுகளுக்குள் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதற்கிடையில், சிறைச்சாலை வளாகத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக முப்படை வீரர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், நிலைமையைக் கண்காணிப்பதற்காக இலங்கை விமானப்படையின் ட்ரோன் விசேட விமானங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன.




No comments: