News Just In

8/28/2026 05:42:00 AM

கடும் வறட்சி: நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி

கடும் வறட்சி: நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி


நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக மகாவலி அதிகார சபையின் கீழுள்ள பல முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது. சில நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 30 சதவீதத்துக்கும் குறைவாக வீழ்ச்சியடைந்துள்ளதுடன், மேலும் சில நீர்த்தேக்கங்களில் 50 சதவீதத்துக்கு அண்மித்த மட்டத்தில் நீர்மட்டம் காணப்படுகின்றது. கடந்த ஓகஸ்ட் 25ஆம் திகதி நிலவரப்படி, கண்டலம குளத்தின் நீர்மட்டம் 50 சதவீதமாகவும், களுகங்கை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 55 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.அதேவேளை, போவத்தென்ன நீர்த்தேக்கத்தில் 21 சதவீதமும், மதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் 26 சதவீதமும், கலா குளத்தில் 29 சதவீதமும், ஹுருளு குளத்தில் 27 சதவீதமும் நீர்மட்டம் பதிவாகியுள்ளது. மிகக் குறைந்த அளவாக தியபான குளத்தின் நீர்மட்டம் 15 சதவீதமாக பதிவாகியுள்ளது. எவ்வாறாயினும், மகாவலி அமைப்பின் கீழுள்ள சில நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் இன்னும் உயர்ந்த நிலையில் காணப்படுவதாக மகாவலி அதிகாரசபையின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

No comments: