மாவடிவேம்பு கிராமத்தின் நீண்டகால காணித் தேவைக்கு தீர்வு
மயானம், விளையாட்டுப்பூங்கா, கலாசார மண்டபம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கான காணிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன
ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மாவடிவேம்பு கிராம மக்களின் நீண்டகாலத் தேவையாக இருந்து வந்த பொது மயானம், விளையாட்டுப்பூங்கா, கலாசார மண்டபம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கான காணி தொடர்பான பிரச்சினைக்கு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்தின் தலையீட்டினால் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.
மாவடிவேம்பு கிராம மக்களின் நீண்டகால கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளருடன் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் அடிப்படையில், குறித்த தேவைகளுக்காக பொருத்தமான காணிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதன் தொடர்ச்சியாக, பொது மயானம், விளையாட்டுப்பூங்கா, கலாசார மண்டபம் மற்றும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் தேவைகளுக்காக காணி வழங்குவதற்கான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரின் சிபார்சுக் கடிதம் இன்றைய தினம் மாவடிவேம்பு கிராம அபிவிருத்திச் சங்கத்தினரிடம் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான அ. பிரிநட்குணபாலன் மற்றும் செ. நிலாந்தன், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள், கிராம அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகள் மற்றும் கிராம மக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
பல வருடங்களாக மாவடிவேம்பு கிராம மக்கள் எதிர்நோக்கி வந்த முக்கியமான அடிப்படைத் தேவைகளில் ஒன்றான பொது மயானத்திற்கான காணி கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் விளையாட்டு நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான விளையாட்டுப்பூங்கா, மக்களின் கலை, கலாசார மற்றும் சமூக நடவடிக்கைகளுக்கான கலாசார மண்டபம், மேலும் கிராம அபிவிருத்திச் சங்கத்தின் செயற்பாடுகளுக்கான காணி ஆகியவற்றுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கிராம மக்களின் நீண்டகால தேவைகளை நேரடியாகக் கேட்டறிந்து, உரிய அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடைமுறை ரீதியான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக இந்த முயற்சி அமைந்துள்ளது.
மாவடிவேம்பு கிராமத்தின் சமூக, கலாசார மற்றும் விளையாட்டுத்துறை வளர்ச்சிக்கு இந்தக் காணிகள் எதிர்காலத்தில் முக்கிய பங்களிப்பை வழங்கும் என கிராம மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்

No comments: