News Just In

7/28/2026 09:11:00 AM

பாரிய மோசடியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அதிசொகுசு வாகனங்கள் - முக்கிய அரசியல்வாதி மீது வலைவீச்சு

பாரிய மோசடியின் கீழ் இறக்குமதி செய்யப்பட்ட அதிசொகுசு வாகனங்கள் - முக்கிய அரசியல்வாதி மீது வலைவீச்சு



பல கோடி ரூபா வரி ஏய்ப்பு செய்து இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 500 சொகுசு வாகனங்கள் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

சுங்க வரியை ஏய்த்து, சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு பதிவு செய்யப்பட்ட சுமார் 500 வாகனங்கள் வீதிகளில் செலுத்தப்பட்டு வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பாக பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு தற்போது தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

நாட்டிற்குள் கொண்டுவரப்பட்ட இந்த வாகனங்களில் பெரும்பாலானவை அதிநவீன சொகுசு வாகனங்கள் எனவும் இவை பாகங்களாகப் பிரிக்கப்பட்டு நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டு மீண்டும் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த சட்டவிரோத நடவடிக்கைக்குச் சில ஊழல் நிறைந்த சுங்க அதிகாரிகளும், வாகனங்களை சட்டவிரோதமாகப் பதிவு செய்வதற்கு மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் அதிகாரிகளும் உடந்தையாக இருந்துள்ளமை ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சட்டவிரோதமாகப் பதிவு செய்யப்பட்டு தற்போது வீதிகளில் செலுத்தப்பட்டு வரும் பெரும்பாலான வாகனங்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு ஏற்கனவே அடையாளப்படைத்தியுள்ளது.

அடையாளம் காணப்பட்டுள்ள சொகுசு வாகனங்களை விரைவில் பொலிஸ் பொறுப்பில் எடுப்பதற்குப் பயங்கரவாத தடுப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு தயார் நிலையில் உள்ளாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சட்டவிரோதப் பதிவுகள் அனைத்தும் கடந்த கால அரசாங்கங்களின் ஆட்சியின் போதே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுங்க அதிகாரிகள் மீது பாயும் சட்டம்

போலி ஆவணங்கள் மூலம் வாகனங்களைப் பதிவு செய்த குற்றச்சாட்டின் கீழ், மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர்கள் இருவர் உட்படப் பல அதிகாரிகள் அண்மையில் லஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 2023 ஆம் ஆண்டு பாணந்துறை மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடிச் சோதனைகளில், இரகசியமாக கொண்டுவரப்பட்டு பதிவு செய்யப்பட்ட சுமார் 100 வாகனங்கள் கைப்பற்றப்பட்டன.

அவற்றில் பெரும்பாலான வாகனங்களை அரசியல்வாதிகளுடன் தொடர்புடைய நபர்களே பயன்படுத்தி வந்துள்ளனர்.

அப்போதைய சோதனைகளின் போது மேலும் 400 போலி வாகனங்கள் தொடர்பான ஆவணங்கள் கண்டறியப்பட்ட நிலையில், அன்றைய பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் அந்த விரிவான விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: