News Just In

7/30/2026 10:15:00 AM

104 மெட்ரோ பேருந்துகள் நாட்டிற்கு வந்தடைந்தன

104 மெட்ரோ பேருந்துகள் நாட்டிற்கு வந்தடைந்தன



2025 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளுக்கு அமைய, பொதுப் போக்குவரத்தை மேம்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக நவீன மற்றும் வசதியான, மேம்பட்ட தொழில்நுட்பத்தைக் கொண்ட பேருந்துகளை அறிமுகப்படுத்தும் திட்டத்தின் (Urban Luxury Transport) கீழ் இறக்குமதி செய்யப்பட்ட 104 மெட்ரோ பேருந்துகளை ஏற்றிய கப்பல் நேற்று (29) பிற்பகல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்தது.

இந்தப் பேருந்துகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதல் கொழும்பு நகர்ப்புற பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

No comments: