News Just In

6/18/2026 02:28:00 PM

உடல் சார்ந்த தண்டனையை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நிகழ்வு

உடல் சார்ந்த தண்டனையை கட்டுப்படுத்துவதற்கான விழிப்புணர்வு நிகழ்வு


உடல் சார்ந்த தண்டனையை கட்டுப்படுத்துவர் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் கலாசார மண்டபத்தில் புதனன்று 17.06.2026 இடம்பெற்றது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் நிஷா ரியாஸ் ஏற்பாட்டில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் மட்டக்களப்பு மாவட்ட செயலகம் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின.

இந்நிகழ்வில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அதிபர்கள் ஆசிரியர்கள், அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாடசாலை மட்டத்தில் உடலியல் தண்டனையை கட்டுப்படுத்து வதற்கும் அவற்றை கையாள்வற்கான வழிமுறைகள் தொடர்பான விளக்கங்களும் பாடசாலைக் கட்டமைப்பை வலுப்படுத்தி மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியான கற்றல் செயற்பாட்டை அதிகரிப்பதற்கான ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.

மாணவர்களிடம் அக்கறை காட்டுவதுடன் அவர்களின் விருப்பங்கள், ஆர்வங்கள், கனவுகள் ஆகியவற்றை ஆசிரியர்கள் அறிந்து கொள்வதனால் மாணவர்கள் ஒழுக்கமாக நடந்துகொள்வதற்கு வாய்ப்பு ஏற்படுகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டது.

மேலும், உடலளவில் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான சட்ட ஏற்பாடுகள், தண்டனைகள் தொடர்பான விளக்கங்களும் துறைசார் நிபுணர்களினால் வழங்கப்பட்டன.

நிகழ்வின் வளவாளர்களாக உளநள வைத்திய நிபுணர் கமல்ராஜ், மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மாவட்ட உத்தியோகத்தர் ஏ. பிரபாகர், சட்டத்தரணி சத்துரிக்கா ஆகியோர் கலந்து கொண்டு தெளிவுபடுத்தினர்
(.எச்.. ஹுஸைன்)

No comments: