News Just In

6/02/2026 12:51:00 PM

நீதிபதியின் இடமாற்றத்துக்கும் ஆளுநருக்கும் தொடர்பு இல்லை- வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் மறுப்பு!

நீதிபதியின் இடமாற்றத்துக்கும் ஆளுநருக்கும் தொடர்பு இல்லை- வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் மறுப்பு!



யாழ்ப்பாண மேல் நீதிமன்றத்தின் நீதிபதி ஏ.ஜி. அலெக்ஸ்ராஜாவின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையே எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

மேற்படி நீதிபதியின் இடமாற்றத்தின் பின்னணியில் வடக்கு மாகாண ஆளுநர் இருக்கின்றார் எனச் சமூக வலைத்தளங்களிலும், அரசியல் தளங்களிலும் பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையிலேயே, அந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தால் இந்த விளக்க அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சமூகத்தில் எழக்கூடிய தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உண்மை நிலைமையைப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலுமே இந்த மறுப்பு அறிக்கை வெளியிடப்படுகின்றது என்று வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் மேலும் தெரிவித்துள்ளது.

No comments: