'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' - சட்டத்தரணி சாலிய பீரிஸின் சர்ச்சைக்குரிய பதிவு
அடக்குமுறை சட்டங்களைப் பாதுகாத்து மற்றும் அவற்றை தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்துவதற்கு பொறுப்பாக இருந்த சிலர் இன்று அதே சட்டங்களுக்கு பலியாகியுள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.தனது சமூகவலைத்தளத்தில் பதிவொன்றை இட்டுள்ள அவர்,
பொலிஸ் மற்றும் தடுப்புக்காவலில் இருக்கும் காலப்பகுதியில் சித்திரவதை செய்தல் கொடூரமான மனிதாபிமானமற்ற முறையில் நடத்தும் கலாசாரத்தை செயற்படுத்துவதற்காக பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச உடன்படிக்கை போன்ற சட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.அவர் வெளியிட்டுள்ள முழுமையான பதிவு:
நீண்ட காலமாக நம்மில் சிலர் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்களால் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ( PTA) சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பற்றிய சர்வதேச உடன்படிக்கைச் சட்டம் ( ICCPR ) மற்றும் அவசரகாலச் சட்ட விதிமுறைகள் போன்ற கடுமையான ஒடுக்குமுறைச் சட்டங்களை துஷ்பிரயோகம் செய்ததை தொடர்ந்து கண்டித்து வந்துள்ளோம்.
நீண்ட காலம் மற்றும் சாதாரண காரணங்களுக்கும் தடுப்புகாவலில் வைப்பதற்காக இந்தச் சட்டங்கள் எவ்வாறு துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளன என்பதை நாம் கண்டுள்ளோம்.
பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகளில் இருக்கும் காலப்பகுதியில் சித்திரவதை செய்தல் கொடூரமான மனிதாபிமானமற்ற முறையில் நடத்தும் கலாசாரத்தை நிலைநிறுத்துவதற்கும் இந்தச் சட்டங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
தடுத்து வைப்பதற்கான தீர்மானம் ஜனாதிபதிகள் அமைச்சர்கள் செயலாளர்கள் அல்லது பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்க வேண்டாம் என்பது இதனால்தான் ஆகும்.
இந்த ஒடுக்குமுறைச் சட்டங்களைப் பாதுகாத்த மற்றும் அவற்றை நடைமுறைப்படுத்துவதற்குப் பொறுப்பாக இருந்த சிலர் இன்று அதே சட்டங்களுக்கு பலிகடாவாகியுள்ளனர். இந்தச் சட்டங்களை நீக்கக் கோரிய வேறு சிலர் பின்னர் அவற்றை நடைமுறைப்படுத்தவும் அவற்றில் சார்ந்திருக்கவும் செயற்டுகின்றனர்.
6/09/2026 09:11:00 AM
Home
/
Unlabelled
/
'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' - சட்டத்தரணி சாலிய பீரிஸின் சர்ச்சைக்குரிய பதிவு
'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' - சட்டத்தரணி சாலிய பீரிஸின் சர்ச்சைக்குரிய பதிவு
Subscribe to:
Post Comments (Atom)
No comments: