News Just In

5/04/2026 05:37:00 AM

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் குறித்து அதிர்ச்சி குறுஞ்செய்திகளை வெளியிட்ட ஓஷல ஹேரத்

உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்கள் குறித்து அதிர்ச்சி குறுஞ்செய்திகளை வெளியிட்ட ஓஷல ஹேரத்



உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு முன்னதாக, இத்தாக்குதல்கள் குறித்து அரச புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளரால் பாதுகாப்பு செயலாளருக்கு அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளின் ஸ்கிரீன்ஷொட்கள் சிவில் செயற்பாட்டாளர் ஓஷல ஹேரத்தினால் பகிரப்பட்டுள்ளன.

அரச புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளரால் பாதுகாப்பு செயலாளருக்கும் அனுப்பிவைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்தக் குறுஞ்செய்திகளில், சஹ்ரான் ஹாஸீம் மற்றும் அவரது சகாக்கள் இலங்கையில் பாரிய தாக்குதலொன்றை நடாத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாக வெளிநாட்டுப் புலனாய்வு அமைப்பொன்றிடமிருந்து தகவல்கள் கிடைத்திருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதுமாத்திரமன்றி 16.04.2019 அன்று காத்தான்குடியில் வெடிபொருட்கள் நிரப்பப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒத்திகை குறித்தும் அந்தக் குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்தோடு அக்குறுஞ்செய்தியில், சஹ்ரான் குழுவின் தாக்குதல் 21.04.2019 அன்று அல்லது அதற்கு முன்னதாக எந்த நேரத்திலும் நடாத்தப்படக்கூடும் எனவும், தேவாலயங்கள் மற்றும் ஹோட்டல்கள் இலக்குவைக்கப்படக்கூடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அரச புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளரால் அனுப்பிவைக்கப்பட்ட இக்குறுஞ்செய்தியைப் பெற்றுக்கொண்டதாகப் பாதுகாப்புச்செயலாளர் பதிலளித்துள்ளார்.

No comments: