News Just In

5/19/2026 06:01:00 PM

போரில் உயிர்நீத்த ரணவீரர்களை நினைவுகூர்ந்து அரந்தலாவில் தீபம் ஏற்றப்பட்டது

போரில் உயிர்நீத்த ரணவீரர்களை நினைவுகூர்ந்து அரந்தலாவில் தீபம் ஏற்றப்பட்டது



நூருல் ஹுதா உமர்

யுத்தம் நிறைவடைந்து 17 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, அரந்தலாவ சர்வதேச பௌத்த மையத்தில் போரில் உயிர்நீத்த ரணவீரர்களை நினைவுகூரும் நிகழ்வு நடைபெற்றது.

31 பிக்குகள் படுகொலை செய்யப்பட்ட அரந்தலாவ புனித பூமியில் நடைபெற்ற இந்நிகழ்வு, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சமத்த பலசம்பன்ன பிரதம சங்கநாயக்கரும், அரந்தலாவ சர்வதேச பௌத்த மைய அதிபதியுமான, அம்பாறை மகாவாபி விகாராதிபதியும், அம்பாறை வித்யானந்த பிரிவேணாவின் பணிப்பாளரும், ஓய்வுபெற்ற உதவி கல்விப் பணிப்பாளருமான கிரிதிவெல நாயக்க தேரர் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனயின் அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான டபிள்யூ.டி. வீரசிங்க ஏற்பாடு செய்திருந்தார். நிகழ்வின் ஆரம்பமாக, அரந்தலாவ புனித பூமியில் அமைந்துள்ள இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஜயசிறி மகா போதி மரத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து, அரந்தலாவில் உயிரிழந்த பிக்குகளின் நினைவுச் சின்னம் அருகில் பூஜை நிகழ்வுகள் நடைபெற்றன.

போதி பூஜையை அரந்தலாவ விகாராதிகாரி சாஸ்திரபதி பல்லேவெல மகிந்த தேரர் நடத்தி வைத்தார். பின்னர் மாலை 6.15 மணிக்கு அனைவரும் மெழுகுவர்த்தி ஏற்றி, போரின் போது நாட்டிற்காக உயிர்நீத்த அனைத்து ரணவீரர்களையும் நினைவுகூர்ந்தனர்.

இந்நிகழ்வில் மகாஓயா பிரதேச சபை தலைவர் சுகத் லசந்த உள்ளிட்ட மகாஓயா, பதியத்தலாவ, தெஹியத்தகண்டிய, உஹன, தமன மற்றும் அம்பாறை பிரதேச உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

No comments: