அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா மாளிகைக்காடு- சாய்ந்தமருது கிளையும், மாளிகைக்காடு சாய்ந்தமருது கதீப்–முஅத்தின் சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த இஜாஸாவுடன் இணைந்த அதான் பயிற்சிப் பாடநெறி (03.05.2026) ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை மாளிகைக்காடு -சாய்ந்தமருது ஜம்இய்யதுல் உலமா கிளை காரியாலயத்தில் நடைபெற்றது.
ஜம்இய்யாவின் தலைவர் அஷ்ஷேய்க் எம். எம். மீராஸாஹிப் சலீம் (ஷர்க்கி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி, சாய்ந்தமருது மாளிகைக்காடு கதீப்–முஅத்தின் சம்மேளனத்தின் தலைவர் அஷ்ஷேய்க் நப்றாஸ் ஹனிபா ரஹ்மானி அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்றது.
பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்களும் முஅத்தின்களும் பங்கேற்ற இப்பயிற்சியில், அதானின் சரியான உச்சரிப்பு முறைகள், தஜ்வீத் விதிகள், குரல் ஒலியமைப்பு மற்றும் இஜாஸா தொடர்பான வழிகாட்டல்கள் விரிவாக விளக்கப்பட்டன.
வளவாளராக அப்துர் ரஹ்மான் இஸ்லாமிய எகடமியின் அதிபரும், நூருல் ஹுதா அரபுக் கல்லூரியின் பிரதி அதிபருமான அஷ்ஷேய்க் அல் காரி எம்.பி.எம்.முர்ஷித் (ரஷாதி) அவர்கள் கலந்து கொண்டு பயிற்சியை முன்னெடுத்தார்.
இந்நிகழ்வு, பள்ளிவாசல்களில் அதான் வழங்கும் தரத்தை மேம்படுத்துவதற்கான முக்கியமான முயற்சியாகக் கருதப்படுவதுடன், பங்கேற்றவர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றது.
No comments: