News Just In

5/05/2026 05:49:00 PM

தமிழ்நாட்டின் முதலமைச்சராக நாளை மறுநாள் விஜய் பதவியேற்க திட்டம்

தமிழ்நாட்டின் முதலமைச்சராக நாளை மறுநாள் விஜய் பதவியேற்க திட்டம்



தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கு கடந்த மாதம் 23ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.இதனைதொடர்ந்து வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளை கைப்பற்றி அபார வெற்றிப் பெற்றது.தனிப்பெரும்பான்மை இல்லையென்றாலும், சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைக்க முயன்று வருகிறது.

இந்த தேர்தலில் மு.க.ஸ்டாலினின் திமுக 59 தொகுதிகளையும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக 47 தொகுதிகளையும் கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில், தவெக தலைவர் விஜய் மே 7 (நாளை மறுநாள்) முதலமைச்சராகப் பதவியேற்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழாவை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

No comments: