கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் இல்லவிளையாட்டுப் போட்டி 2026.04.30 ம் திகதி மிக விமரிசையாக மின்னொளியில் பாடசாலை மைதானத்தில் நடைபெற்றது.
பாடசாலையின் அதிபர் ஏ.ஜி.எம். றிசாத் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்குப் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்டக் கரையோர பிராந்திய அபிவிருத்திக் குழுவின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அபூபக்கர் ஆதம்பாவா கலந்துகொண்டு சிறப்பித்தார். கௌரவ அதிதியாக கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ். சஹதுல் நஜீம் அவர்களும் கலந்துகொண்டார்.
மேலும், கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் பிரதி கல்வி பணிப்பாளர்களான எம்.எச்.எம். ஜாபிர், யூ.எல். றியால், எம்.எல்.எம். முத்தரிஸ் மற்றும் கல்முனை பிரதேச செயலகத்தின் பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல். ஏ. மஜீத் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகக் கலந்துகொண்டனர்.
மாணவர்களின் அணிவகுப்பு மரியாதை, உடற்பயிற்சிக் கண்காட்சி மற்றும் வினோத உடைப் போட்டிகள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்தன.
பலாஹ் (நீலம்), ஹுதா (சிவப்பு), ஸலாம் (பச்சை) ஆகிய மூன்று இல்லங்களுக்கு இடையே நடைபெற்ற விறுவிறுப்பான போட்டிகளில் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.
4 x 50 மீட்டர் அஞ்சலோட்டம், தடைதாண்டி ஓட்டம் உள்ளிட்ட தடகளப் போட்டிகள் விறுவிறுப்பாக அமைந்தன.
இப்போட்டியில் சலாம் (பச்சை) இல்லம் அதிகபடியான புள்ளிகளைப் பெற்று இவ்வருடத்திற்கான சம்பியனாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நிகழ்வின் இறுதியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குச் சான்றிதழ்களும் கிண்ணங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டன
No comments: