
தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காததை கண்டித்து இன்று (மே 08) காலை 11 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் குறிப்பிட்டுள்ளார்
அந்த அறிக்கையில், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக தமிழக வெற்றிக்கழகம் வெற்றி பெற்றுள்ளது.
ஆனாலும் தவெக ஆட்சி அமைக்க கூடாது என்ற நோக்கத்தில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிராக பாஜக மற்றும் அவர்களின் கைப்பாவையாக ஆளுநர் செயல்படுகிறார்.
அவர்களின் இந்த செயல்பாட்டை கண்டித்து மாவட்ட தலைநகரங்களில் இன்று காலை 11 மணிக்கு காங்கிரஸ் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கின்றோம்.
அத்துடன் சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் அண்ணா சாலை, தாராப்பூர் டவர் அருகே எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர்கள், முன்னாள் ஒன்றிய அமைச்சர்கள், காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள், மாவட்ட தலைவர்கள் என பலரும் கலந்துகொள்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
No comments: