News Just In

5/11/2026 01:23:00 PM

மின்கட்டணத் திருத்தம் இன்று முதல் நடைமுறை!

மின்கட்டணத் திருத்தம் இன்று முதல் நடைமுறை!



2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்குரிய மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (மே 11) முதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பால் மின் உற்பத்திச் செலவு உயர்ந்துள்ள போதிலும், அரசாங்கத்தின் விசேட மானியத்தால் பெரும்பாலான நுகர்வோர் பாதிக்கப்பட மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரக் கட்டண அதிகரிப்பினால் நுகர்வோர் பெரும் சிரமங்களுக்கு உள்ளாவதைத் தடுக்க, அரசாங்கம் 15 பில்லியன் ரூபா மானியத்தை வழங்க உடன்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டின் 95 சதவீத மின் நுகர்வோருக்கு இந்த கட்டண அதிகரிப்பு பொருந்தாது.

குறிப்பாக, வீட்டுப் பிரிவில் 0 முதல் 180 அலகுகள் வரை மின்சாரத்தைப் பயன்படுத்துவோருக்கு எந்தவிதக் கட்டண அதிகரிப்பும் கிடையாது.

அதிகரிப்பு யாருக்கு? எவ்வளவு? 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் நுகர்வோருக்கான கட்டணங்கள் மாத்திரம் பின்வருமாறு அதிகரிக்கப்பட்டுள்ளன:

2026 இரண்டாம் காலாண்டிற்கான கட்டணத் திருத்தத்திற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது.

ஆரம்பத்தில் 8% முதல் 14.4% வரை கட்டணங்களை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டது.

எரிபொருள் விலை உயர்வால் அதிகரித்த மின் உற்பத்தி செலவு மதிப்பீட்டை 'நேஷனல் சிஸ்டம் ஆப்பரேட்டர்' நிறுவனம் கடந்த ஏப்ரல் 27 ஆம் திகதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.

இந்தத் திருத்தத்தின் மூலம் மின் உற்பத்திச் செலவை ஈடுசெய்யும் அதேவேளை, சாதாரண நுகர்வோரைப் பாதுகாக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

No comments: