News Just In

5/06/2026 01:01:00 PM

காரைதீவு சித்தானைக்குட்டி பாலர் பாடசாலையில் மழலைகளின் தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம் !

காரைதீவு சித்தானைக்குட்டி பாலர் பாடசாலையில் மழலைகளின் தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம் !


நூருல் ஹுதா உமர்

அம்பாறை மாவட்டத்தின் காரைதீவு பிரதேசத்தில் அமைந்துள்ள சித்தானைக்குட்டி பாலர் பாடசாலையில் தமிழ்-சிங்கள புத்தாண்டு கொண்டாட்டம் இன்று (06) உற்சாகமான முறையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பாடசாலை மழலைகள் நான்கு இனங்களின் (தமிழ், சிங்கள, முஸ்லிம், கிறிஸ்தவ) பாரம்பரிய கலாசார உடைகளை அணிந்து கலந்து கொண்டது சிறப்பம்சமாக அமைந்தது. பல்வகை கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் வண்ணம் மாணவர்கள் அணிந்திருந்த ஆடைகள் நிகழ்விற்கு வண்ணமயமான தோற்றத்தையும் ஒற்றுமையின் செய்தியையும் எடுத்துரைத்தன.

புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டுகள், பாடல்கள், நடனங்கள் மற்றும் சிறுவர் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்று, பங்கேற்ற பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றன. சிறுவர்களின் திறமைகளை வெளிக்கொணரும் வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட நிகழ்ச்சிகள் அனைவரையும் கவர்ந்தது.

இந்த நிகழ்வு மூலம் சிறுவர்களுக்கு நாட்டின் பல்வேறு இனங்களின் கலாச்சாரங்களை அறிமுகப்படுத்துவதோடு, இன ஒற்றுமை, பரஸ்பர மரியாதை மற்றும் சகோதரத்துவ உணர்வுகளை வளர்க்கும் நோக்கம் வலியுறுத்தப்பட்டது.

பாடசாலை நிர்வாகம், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்து இந்த நிகழ்வை சிறப்பாக ஒழுங்கமைத்திருந்தனர். இத்தகைய நிகழ்வுகள் மாணவர்களின் சமூக மற்றும் கலாச்சார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை வழங்குகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments: