News Just In

5/16/2026 09:05:00 AM

சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தவறியதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் நீக்கம் !

சட்டவிரோத மது விற்பனையை தடுக்க தவறியதாக திருவொற்றியூர் காவல் ஆய்வாளர் நீக்கம் !
சென்னை காவல் ஆணையர் நடவடிக்கை





 திருவொற்றியூர் காவல் நிலை​யத்​தில் சட்​டம் - ஒழுங்கு காவல் ஆய்​வாள​ராக இருப்​பவர் அலெக்​ஸ். இவர் விடுப்​பில் சென்​ற​தால் அக்காவல் நிலைய குற்​றப்​பிரிவு ஆய்​வாளர் மோகன்​தாஸ், கூடு​தல் பொறுப்​பாகச் சட்​டம் - ஒழுங்கு பணி​களைக் கவனித்து வந்​தார்.

இந்​தச் சூழலில் திருவொற்​றியூர் பகு​தி​யில் உள்ள டாஸ்​மாக் கடை ஒன்​றில் அனு​ம​திக்​கப்​பட்ட நேரத்​துக்கு முன்​னரும் (மதி​யம் 12 மணி), அனு​ம​திக்​கப்​பட்ட நேரத்​தைத் தாண்​டி​யும் (இரவு 10 மணி) சட்ட விரோத​மாக மது விற்பனை நடை​பெறு​வ​தாகப் புகார்​கள் எழுந்​தன.

இது தொடர்​பான வீடியோ சமூக வலை​தளங்​களில் அண்​மை​யில் வைரலானது. சென்​னை​யில் சட்​ட​விரோத மது விற்​பனையை இரும்​புக்​கரம் கொண்டு அடக்க வேண்​டும் என்று காவல் ஆணை​யர் அபின் தினேஷ் மோடக் ஏற்​கெனவே உத்​தர​விட்​டிருந்​தார்.

இந்​நிலை​யில் தன் பொறுப்​பில் இருந்த பகுதியில் கள்​ளச்​சந்தை மது விற்பனையைத் தடுக்​கத் தவறிய காவல் ஆய்​வாளர் மோகன்தாஸை பணி​யிடை நீக்​கம் செய்து காவல் ஆணை​யர் உத்​தர​விட்​டுள்​ளார்.

“இது போன்ற சட்​ட​விரோத செயல்​களில் ஈடு​படு​வோர் மீது கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும். தேவைப்​பட்​டால் குண்​டர் சட்​டத்​தில் குற்றவாளி​கள் சிறை​யில் அடைக்கப்​படு​வார்​கள்.

சட்​ட​விரோத மது விற்​பனையை தடுக்​கத் தவறும் காவல் துறை​யினர் மீதும் பாரபட்​சம் இன்றி கடுமை​யான நடவடிக்கை எடுக்​கப்​படும்'' என காவல் ஆணை​யர்​ எச்​சரிக்​கை விடுத்​துள்​ளார்​.

No comments: