News Just In

5/06/2026 02:57:00 PM

முள்ளிவாய்க்கால் மாதத்தில் சரிந்த திமுகவின் சாம்ராஜ்யம்; ஈழத் தமிழர்களின் சாபமா!

முள்ளிவாய்க்கால் மாதத்தில் சரிந்த திமுகவின் சாம்ராஜ்யம்; ஈழத் தமிழர்களின் சாபமா!



2026 ஆம் ஆண்டு மே மாதம் நிலவரப்படி, தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், நடிகர் விஜய் தலைமையிலான தவெக கட்சி யாரும் எதிர்பாராத வகையில் 107 தொகுதிகளில் முன்னிலை வகித்து இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக அரசியல் வரலாற்றில் சுமார் 60 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த திமுகவின் சாம்ராஜ்யம் வரலாறு காணாத தோல்வியை தழுவியுள்ளது. இந்நிலையில் திமுகவின் சாம்ராஜ்யம் சரிந்தமைக்கு ஈழத் தமிழர்களுக்கு இழைத்த பெரும் துரோகமே காரணம் என சமூக வலைத்தளங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.

ஈழத் தமிழர்களுக்கு இழைத்த பெரும் துரோகம்

கலைஞர் கருணாநிதி முதல், அவரது மகன் ஸ்டாலின் வரை கருணாநிதி குடும்பமே , ஈழத் தமிழர்களை தொப்புள்கொடி உறவுகள் என்றே கூறி வந்த போதிலும் திரைமறைவில் ஈழத் தமிழர்களின் அழிவுக்கு காரணமானவர்கள் திமுக என்பதை வரலாறு அறிந்த யாருமே மறுக்க மாட்டார்கள்.

அதுமட்டுமா....ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை அனுபவித்து விடுதலையான சாந்தன் மரணம் , யாராலும் மறக்கமுடியாது. தன் மகனுக்கு தன் கையால் ஒருவேளை உணவு கொடுக்க யாழில் அவரது தாயார் காத்திருக்க , இந்திய மத்திய அரசு சாந்தனை விடுதலை செய்ய அனுமதி வழங்கி இருந்தும், தாயகத்திற்கு சாந்தனை உடலை அனுப்பியதும் இந்த திமுக என்பதை யாராலும் மறுக்க முடியாது.

வெளியில் சொல்லப்படாத இன்னும் பல துரோகங்களே இன்று திமுகவின் சாம்ராஜ்ஜம் சரிந்தமைக்கு காரணம் ஆகும். அதுவும் முள்ளிவாய்க்கால் மாதத்தில் திமுகவின் கோட்டை சரிந்துள்ளது ...ஈழதமிழர்களுக்கு இவர்கள் இழைத்த அநீதிக்கு அதே மாதத்தில் கர்மா பழிவாங்குகின்றது என்பது உண்மை.

No comments: