
ஆளுநர் அழைப்பு விடுக்காததால் தமிழ்நாட்டின் முதல்வராக விஜய் பதவியேற்கும் விழா தள்ளிப்போவதாக தெரிய வந்துள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதலமைச்சர் பொறுப்பை ஏற்க ஆளுநருக்கு அழைப்பு விடுத்தார்.
ஆனால், ஆதரவு எம்.எல்.ஏக்களின் முழுப்பட்டியலை தந்தால் மட்டுமே ஆட்சி அமைக்க ஆளுநர் அர்லேகர் அழைப்பு விடுப்பார் என்ற தகவல் வெளியானது.
இதன் காரணமாக த.வெ.க தலைவர் விஜய்யின் பதவியேற்பு விழா தள்ளிப்போகும் சூழல் உருவாகியது.
இந்த நிலையில், இதுவரையிலும் ஆளுநர் எந்தவித பதிலும் வழங்காத நிலையில் இன்று நடைபெற இருந்த முதல்வர் பதவியேற்பு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஆளுநர் அர்லேக்கரை மீண்டும் த.வெ.க தலைவர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தனிப்பெரும் கட்சியான தங்களை ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க வேண்டும்; சட்டப்பேரவையில் பெரும்பான்மையை நிரூபிப்போம் என கோரிக்கை விடுக்க உள்ளார் என்றும் தெரிய வந்துள்ளது.
No comments: