News Just In

5/03/2026 06:46:00 AM

மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் சுருட்டிய சிஎஸ்கே | ஐபிஎல் 2026

மும்பையை 8 விக்கெட் வித்தியாசத்தில் சுருட்டியசிஎஸ்கே | ஐபிஎல் 2026



 ஐபிஎல் 2026 தொடரின் 44-வது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

சேப்பாக்கம் மைதானத்தில் சனிக்கிழமை (மே 2) டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடக்க வீரர் வில் ஜாக்ஸ் (1) ஏமாற்றமளித்தாலும், ரையான் ரிக்கெல்டன் (37) மற்றும் நமன் தீர் (57) ஜோடி அணியை மீட்டெடுக்கப் போராடியது. சூரியகுமார் யாதவ் 21 ரன்களில் ஆட்டமிழக்க, மற்ற நட்சத்திர வீரர்களான திலக் வர்மா (8) மற்றும் கேப்டன் ஹர்திக் பாண்டியா (18) ஆகியோர் சோபிக்கத் தவறினர்.

இதனால் மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை தரப்பில் அன்ஷுல் கம்போஜ் 3 விக்கெட்டுகளையும், நூர் அகமது 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.

160 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்குத் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் (11) விரைவில் வெளியேறினார். அதன் பின்னர் ஜோடி சேர்ந்த கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் இம்பாக்ட் பிளேயராக வந்த கார்த்திக் சர்மா ஜோடி அதிரடியாக விளையாடி வெற்றியை எளிதாக்கியது. ருதுராஜ் 48 பந்துகளில் 67 ரன்களும் (5 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள்), கார்த்திக் சர்மா 40 பந்துகளில் 54 ரன்களும் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

சென்னை அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தைத் தக்கவைத்து தனது பிளே-ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது.

அதேசமயம், தொடர் தோல்விகளால் மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துள்ளது. மும்பை இந்​தி​யன்ஸ் அணி பிளே ஆஃப் சுற்​றுக்கு தகுதி பெறு​வதற்​கான வாய்ப்​புக்​காக ரன் ரேட்​டை​யும், மற்ற அணி​களின் வெற்​றி, தோல்வி முடிவு​களை​யும் பெரிதும் சார்ந்​திருக்க வேண்டிய நிலைக்​குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் காயம் காரணமாக எம்.எஸ். தோனி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: