News Just In

5/04/2026 08:23:00 AM

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களிலும் தொடங்கியது வாக்கு எண்ணிக்கை
அணிகள்முன்னிலை/வெற்றிகட்சி வாரியாக
திமுக+
0
திமுக 28
காங்கிரஸ் 2
தேமுதிக 0
விசிக 0
இடதுசாரிகள் 1
மற்றவை 0
அதிமுக+
0
அதிமுக 15
பாஜக 1
அமமுக 1
பாமக 0
தமாகா 0
மற்றவை 0
நாதக
0
நாதக 0
தவெக
0



தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை பொதுத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் தொடங்கியது.

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இயந்திரங்களில் பதிவான வாக்குகள் 8.30 மணி முதல் எண்ணப்படுகின்றன. காலை 11 மணியளவில் முன்னிலை நிலவரம் தெரியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


சேலத்தில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு வந்த முகவர்கள் பலத்த பரிசோதனைக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்ட காட்சி.

2 வாக்கு எண்ணும் மையங்கள்: தமிழகத்தைப் பொருத்தவரை, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4,023 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர். மொத்தம் 5.73 கோடி வாக்காளர்களில் 4.88 கோடி பேர் வாக்களித்தனர்.

மொத்தம் 75,064 வாக்குச்சாவடிகளில், 1,06,408 வாக்குப்பதிவு இயந்திரங்கள், தலா 75,064 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் விவிபாட் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டன.


வாக்குப் பதிவு முடிந்ததும் அவை அனைத்தும் தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 62 வாக்கு எண்ணும் மையங்களுக்கு கொண்டு சென்று பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

4 முனைப் போட்டி: தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களத்தில் இந்தமுறை 4 முனைப் போட்டி நிலவியது. புதிதாக தேர்தல் களம் கண்ட விஜய்யின் தவெக, இந்தத் தேர்தலில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலுக்கு முன்பு வரை தவெகவுக்கு கூடும் கூட்டமெல்லாம் வாக்காகது என்றே கணிக்கப்பட்ட நிலையில், தேர்தலுக்குப் பின்னர் தவெக ஒரு கேம் சேஞ்சர் என்ற வகையில் அணுகப்படுகிறது.

இந்த நிலையில் திமுக ஆட்சியைத் தக்க வைக்குமா?, கருத்துக் கணிப்புகளை தவிடுபொடியாக்கி அதிமுக ஆட்சி அமைக்குமா? இல்லை யாரும் எதிர்பாராத பலத்துடன் தவெக அரசியல் திருப்பத்தை ஏற்படுத்துமா? என்ற எதிர்பார்ப்புகளுக்கு முற்பகல் 11 மணியளவில் விடை தெரிந்துவிடும்.

No comments: