News Just In

5/04/2026 01:08:00 PM

தேர்தல் முடிவுகள் 2026: அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக நிலவரம் என்ன?


தேர்தல் முடிவுகள் 2026: அதிமுக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக நிலவரம் என்ன?





தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் எத்தனை இடங்களில் முன்னிலை வகிக்கிறது என்று நிலவரம் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், நண்பகல் நிலவரப்படி அதிமுக தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள அதிமுக 60 தொகுதிகளிலும், பாமக 5 தொகுதிகளிலும், பாஜக 2 தொகுதிகளிலும், அமமுக 1 தொகுதியிலும் முன்னிலை வகிக்கிறது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியே வெற்றிபெறும் என பல்வேறு கருத்துக்கணிப்புகள் வெளியான நிலையில், அனைத்து கட்சிகளுக்கும் ஷாக் கொடுக்கும் வகையில் விஜய்யின் தவெக பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தற்போதைய நிலவரப்படி தவெக 108 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 67 தொகுதிகளில், திமுக கூட்டணி 59 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப். 23-ம் தேதியும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் 85.10 சதவீத வாக்குகள் பதிவாகின. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் நான்கு முனைப்போட்டி நிலவியது.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் காங்கிரஸ், தேமுதிக, விசிக, சிபிஎம், சிபிஐ, மதிமுக, கொமதேக, ஐயுஎம்எல், மமக உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றன. நாதக மற்றும் தவெக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிட்டன.

திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திமுக 164 தொகுதிகளிலும், காங்கிரஸ் 28, தேமுதிக 10, விசிக 8, சிபிஎம் 5, சிபிஐ 5, மதிமுக 4, கொமதேக 2, ஐயுஎம்எல் 2, மமக 2, எஸ்டிபிஐ 1, மஜக 1, முக்குலத்தோர் புலிப்படை 1, தமிழர் தேசம் கட்சி 1 தொகுதிகளில் போட்டியிட்டன.

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக 166 தொகுதிகளிலும், பாஜக 26 தொகுதிகளிலும், பாமக 18, அமமுக 11, தமாகா 4, ஐஜேகே 2, புரட்சி பாரதம் 1, புதிய நீதிக் கட்சி 1, தென்னிந்திய பார்வர்டு பிளாக் 1, சிங்கத் தமிழர் முன்னேற்ற கழகம் 1, தமிழ் மாநில பகுஜன் சமாஜ் 1 தொகுதிகளில் போட்டியிட்டன

No comments: