News Just In

4/01/2026 06:31:00 AM

தமிழ் மக்களுக்கான தீர்வு முதல் System Change வரை...! புதைக்கப்பட்ட வாக்குறுதிகள் - அலி சப்ரி

தமிழ் மக்களுக்கான தீர்வு முதல் System Change வரை...! புதைக்கப்பட்ட வாக்குறுதிகள் -  அலி சப்ரி


சிஸ்டம் சேஞ்ச் (System Change) என்ற பாரிய எதிர்பார்ப்புடன் ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், நடைமுறையில் எந்தவொரு மாற்றத்தையும் காட்டவில்லை என முன்னாள் நீதி, நிதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

ஐபிசி (IBC) தமிழின் களம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தொடர்ந்தும் தெரிவித்த அவர், ஒரு வருடம் கடந்தும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு முறையானதொரு அரசியல் தீர்வைப் பெற்றுத்தர அரசாங்கம் தவறிவிட்டது என்பதைச் சுட்டிக்காட்டினார்.

காணாமலாக்கப்பட்ட மக்கள் தொடர்பிலும் எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை என்பதுடன் கடந்த கால வரிவிதிப்பு முறைகளை மாற்றி மக்களுக்குச் சலுகை வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போதைய பொருளாதார நெருக்கடிகளுக்கு ஏற்றவாறு மக்களுக்கு எவ்வித தீர்வுகளையும் வழங்கவில்லை என்பதையும் அவர் தெரிவித்தார்.

ஊழல்வாதிகளைக் கைது செய்வதாகக் கூறி சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்துவிட்டு பாரிய அளவில் எதையும் அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பதை அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

No comments: