News Just In

4/18/2026 06:38:00 PM

NDB வங்கியில் நடந்த மோசடிகள்.. மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்

NDB வங்கியில் நடந்த மோசடிகள்.. மத்திய வங்கி எடுத்துள்ள  தீர்மானம்



NDB வங்கியில் இடம்பெற்ற நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்த, வெளிநாட்டு நிபுணர்களைக் கொண்ட ஒரு முன்னணி சர்வதேச நிறுவனத்தை நியமிக்க இலங்கை மத்திய வங்கி (CBSL) தீர்மானித்துள்ளது.

இந்தத் தணிக்கையானது வெறும் மோசடியை மட்டும் ஆராயாமல், பின்வரும் விடயங்களிலும் கவனம் செலுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.

மோசடி நடந்த காலத்தில் வங்கியின் கட்டுப்பாட்டு மற்றும் மேற்பார்வை தோல்விகள்.

சம்பந்தப்பட்ட கொடுக்கல் வாங்கல்கள் எவ்வாறு சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டன என்ற விரிவான ஆய்வு.

மேலும், இந்தத் தணிக்கை அறிக்கை நேரடியாக மத்திய வங்கியிடம் சமர்ப்பிக்கப்படும், அத்துடன், வங்கியின் உள்வாரி கட்டுப்பாடுகளை உடனடியாக வலுப்படுத்துமாறு NDBக்கு மத்திய வங்கி உத்தரவிட்டுள்ளது.

வங்கியின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளின் வினைத்திறனை மதிப்பீடு செய்ய ஒரு சுயாதீன மூன்றாம் தரப்பு ஆய்வையும் (Independent third-party review) மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதேநேரம், பெரிய சர்ச்சை நிலவினாலும், மத்திய வங்கி சில முக்கியமான தெளிவுபடுத்தல்களை வழங்கியுள்ளது.

குறிப்பாக, NDB வங்கி தற்போது அனைத்து ஒழுங்குமுறை மூலதன மற்றும் திரவத்தன்மை தேவைகளையும் பூர்த்தி செய்துள்ளது. வங்கியின் ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பில்லை.

இந்த மோசடியினால் இலங்கையின் மற்றைய நிதி நிறுவனங்கள் எவ்வித இழப்பையும் சந்திக்கவில்லை. எனவே, பரப்பப்படும் வதந்திகளை நம்ப வேண்டாம் என மத்திய வங்கி பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், வைப்பாளர்களின் நலனைப் பாதுகாக்கவும் நிதி அமைப்பின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும் மேலதிக நடவடிக்கைகளை எடுக்கத் தயாராக இருப்பதாக மத்திய வங்கி உறுதியளித்துள்ளது.

No comments: