
அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட விடயம் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
இந்நிலையில், அந்த பரபரப்புக்கு இடையே சில பெண்கள் செய்த மோசமான செயல் ஒன்று இணையத்தில் வைரலாகிவருகிறது.
கமெராவில் சிக்கிய காட்சி
சனிக்கிழமை இரவு அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள வாஷிங்டன் ஹில்ட்டன் என்னும் ஹொட்டலில், வெள்ளை மாளிகை ஊடகவியலாளர்கள் சங்க பிரதிநிதிகளுடனான விருந்தொன்றில் கலந்துகொண்டிருந்தார் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்.
அப்போது, திடீரென ஹொட்டலுக்குள் நுழைந்த ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்த, அந்த இடமே பரபரப்பாகியுள்ளது.
துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை அதிகாரிகள் கைது செய்துள்ள நிலையில், அவர் கலிபோர்னியாவைச் சேர்ந்த கோல் டோமாஸ் ஆலன் (Cole Tomas Allen, 31) என தெரியவந்துள்ளது.
யாரோ ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்துவது தெரிந்ததும், பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக ட்ரம்ப் முதலான முக்கியஸ்தர்களை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றுள்ளனர்.
விடயம் என்னவென்றால், இந்த பரபரப்புக்கிடையிலும் சில பெண்கள் செய்த மோசமான செயல் ஒன்று கமெராவில் சிக்கியுள்ளது.
ஆம், நிகழ்ச்சிக்கு வந்தவர்களை அதிகாரிகள் பாதுகாப்பாக வெளியேற்றிக்கொண்டிருக்க, சில பெண்கள், அங்கு மேசைகளில் வைக்கப்பட்டிருந்த விலை உயர்ந்த மதுபான போத்தல்களை சேகரித்துவைத்துக்கொள்ளும் காட்சிகள் பல கமெராக்களில் சிக்கியுள்ளன. அவர்கள் ஊடகவியலாளர்கள் என கூறப்படுகிறது.
ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தி, அந்த இடமே பரபரப்பான நிலையிலும், அந்தப் பெண்கள் எவ்வித பதற்றமுமின்றி மதுபான போத்தல்களை நைசாக எடுத்துக்கொண்டு வெளியேறிய விடயம் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
10 ஆண்டுகள் ஆனாலும், இந்த துப்பாக்கிச்சூடு குறித்து பேசும்போதெல்லாம் இந்த பெண்கள் செய்த மோசமான செயலும்பேசப்படும் என்கிறார் மற்றொரு ஊடகவியலாளர்!
No comments: