அர்ச்சுனா எம்.பியால் தாக்குதலுக்கு உள்ளானபெண்வைத்தியசாலையில்!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அருச்சுனாவின் தாக்குதலுக்கு உள்ளான இரு நபர்களில் பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், மற்றைய நபர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் ஒரு தரப்பினருக்கும் இடையே நேற்றுமுன்தினம் யாழ்ப்பாணம் - பெரியவிளான் பகுதியில் இடம்பெற்ற முரண்பாட்டின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா காலால் உதைத்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட நபர் நேற்றையதினம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்ப்பிக்கப்பட்டார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா இன்றையதினம் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்றையதினம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.
4/27/2026 06:07:00 PM
அர்ச்சுனா எம்.பியால் தாக்குதலுக்கு உள்ளான பெண் வைத்தியசாலையில்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: