News Just In

4/27/2026 11:27:00 AM

பெண்ணை மிரட்டிய அர்ச்சுனா எம்.பி. கைது! துப்பாக்கியும் பறிமுதல்!

பெண்ணை மிரட்டிய அர்ச்சுனா எம்.பி. கைது! துப்பாக்கியும் பறிமுதல்!



காணி தகராறு ஒன்றில் பெண் ஒருவரை துப்பாக்கியை கட்டி மிரட்டியமைக்காக நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் இளவாலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காணிப் பிரச்சினை ஒன்றில் பெண் ஒருவரை துப்பாக்கி முனையில், கொலை செய்யப்பேனோவதாகவும், தலையில் துப்பாக்கியால் சுடுவதாகவும் அச்சுறுத்திய சம்பவம் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.

அது குறித்தான காணொளி சர்ச்சையாகிய நிலையில் இன்றையதினம் வாக்குமூலம் வழங்குவதற்காக இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் வாக்குமூலம் பெறப்பட்ட பின்னர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரது கைத் துப்பாக்கியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 25ஆம் திகதி குறித்த காணியை சுத்தம் செய்ய நாடாளுமன்ற உறுப்பினர் சென்றபோது, ​​அங்கு வந்த இரண்டு பெண்கள் அதன் ஒரு பகுதி தங்களுக்குச் சொந்தமானது எனக் கூறி நாடாளுமன்ற உறுப்பினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதனால் ஆத்திரமடைந்த நாடாளுமன்ற உறுப்பினர், அப்பெண்களைத் தன் கையிலிருந்த கைத்துப்பாக்கியை காட்டி கொலை செய்வேன் என மிரட்டினார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவால் கொலை மிரட்டலுக்குள்ளான குடும்பப் பெண்ணை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார். இதன்போது அவரது ஒரு வயது குழந்தையும் அவருடனேயே இருக்க நீதிமன்றம் அனுமதி நேற்று வழங்கியுள்ளது.

No comments: