News Just In

4/27/2026 11:55:00 AM

துறவறத்திலிருந்து நீக்கவும்: மகா நாயக்க தேரர்கள் அறிவிப்பு

துறவறத்திலிருந்து நீக்கவும்: மகா நாயக்க தேரர்கள் அறிவிப்பு



சமய மற்றும் விதிகளுக்குப் புறம்பான செயல்களில் ஈடுபடும் பிக்குகள் தொடர்பில் உரிய தரப்பினர் ஊடாகக் கண்டறிந்து, அவர்களைச் சாசனத்திலிருந்து (துறவறத்திலிருந்து) நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மகா நாயக்க தேரர்கள் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக மகா நாயக்க தேரர்கள் விடுத்துள்ள கூட்டறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

இளம் பிக்குகளைத் தந்திரமாகவும் திட்டமிட்ட ரீதியிலும் இவ்வாறான சட்டவிரோதச் செயல்களுக்குப் பயன்படுத்தும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் தொடர்பில் பாதுகாப்புப் பிரிவினர் உடனடி விசாரணைகளை முன்னெடுத்து, தராதரம் பார்க்காமல் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அத்துடன், ஒவ்வொரு இளம் பிக்கு தொடர்பிலும் எப்போதும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். சாசனத்திற்கு விரோதமான செயல்களில் எவரேனும் ஈடுபடுவது அவதானிக்கப்பட்டால், அது குறித்து உடனடியாக ஆராய்ந்து அத்தகைய பிக்குகளை நல்வழிப்படுத்துவதற்கு அந்தந்த விகாரைகளின் பொறுப்பதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இவ்விசேட அறிவித்தலில் திப்புட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல மகா நாயக்க தேரர் (மல்வத்து பீடம்), வரகாகொட தம்மசித்தி ஸ்ரீ பஞ்ஞாநந்த ஞானரதன மகா நாயக்க தேரர் (அஸ்கிரி பீடம்), கரகொட உயங்கொட மைத்திரி மூர்த்தி மகா நாயக்க தேரர் (அமரபுர மகா நிகாய) மற்றும் மகுலேவே ஸ்ரீ விமல மகா நாயக்க தேரர் (ராமஞ்ஞ மகா நிகாய) ஆகியோர் கையொப்பமிட்டுள்ளனர்.

No comments: