கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 110 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள 'குஷ்' மற்றும் 'ஹாஷ்' போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட இருபத்திரண்டு பிக்குகள் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் (26) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இதற்கிடையில், பிக்குகள் குழுவை வழிநடத்தியதாகக் கூறப்படும் தலைமை பிக்கு, கம்பஹாவின் மீகஹமுல்ல பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை (26) கைது செய்யப்பட்டார்.
இந்த செயலில் ஈடுபட்ட அனைத்துத் பிக்குகளும் சம்பந்தப்பட்ட பிரிவுக் கட்சிகளால் விசாரிக்கப்பட்டு, சாசனத்திலிருந்து நீக்கப்படுவார்கள் என்று மூன்று பிரிவுகளைச் சேர்ந்த மகா நாயக்கர்கள் ஞாயிற்றுக்கிழமை (26)ஒரு அறிக்கையை வெளியிட்டனர்.
தாய்லாந்து பயணம் மேற்கொண்டிருந்த இருபத்திரண்டு பேர் சனிக்கிழமை (25) இரவு சுமார் 10.11 மணியளவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தனர்.
தங்களுக்குக் கிடைத்த உளவுத் தகவலின் அடிப்படையில், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நபர்களுக்குச் சொந்தமான, வெவ்வேறு வண்ணங்களில் இருந்த ஒரே மாதிரியான பயணப் பைகளைச் சோதனையிட நடவடிக்கை எடுத்தனர்.
அங்கு, கல்வி உபகரணங்கள், இனிப்புகள் மற்றும் உணவுப் பொருட்கள் நிரப்பப்பட்டிருந்த பயணப் பைகளின் போலி அடிப்பாகங்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 'குஷ்' மற்றும் 'ஹாஷ்' போன்ற போதைப்பொருட்களை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அதன்படி, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் இருபத்தி இரண்டு பேரைக் கைது செய்ய நடவடிக்கை எடுத்தனர்.
ஒவ்வொரு நபரும் பயணப் பைகளில் சுமார் 5 கிலோகிராம் போதைப்பொருட்களை மறைத்து வைத்திருந்தனர் என்றும், கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் மொத்த எடை 112 கிலோகிராம் என்றும் பொலிஸ் கூறுகிறது.
1.1 பில்லியன் ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள இந்த போதைப்பொருள் பறிமுதல், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இதுவரை கைப்பற்றப்பட்டதிலேயே மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதலாகும்.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் போதைப்பொருள் பறிமுதலுடன் துறவிகள் குழு ஒன்று கைது செய்யப்படுவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.
No comments: