News Just In

4/30/2026 05:55:00 AM

சிறைக்குச் செல்வாரா ரணில் - போதிய ஆதரங்கள் இருந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது ஏன்..!

சிறைக்குச் செல்வாரா ரணில் - போதிய ஆதரங்கள் இருந்தும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது ஏன்..!


முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வழக்கு நேற்றைய  தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் குறித்த வழக்கானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராகக் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்யுமாறு அல்லது அவரை வழக்கிலிருந்து விடுவிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பொதுப்பணத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் வழக்கின் மீதான விசாரணைகளின் போது இந்த விடயம் தெரியவந்துள்ளது.

16.6 மில்லியன் ரூபாய் அரச நிதியை முறைகேடாகப் பயன்படுத்தி, உத்தியோகபூர்வ விஜயம் என்ற பெயரில் தனிப்பட்ட வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டதாகக் கூறப்படும் விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

No comments: