News Just In

2/12/2026 02:08:00 PM

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவைக்கு புதிய நிர்வாகிகள் தெரிவு


நூருல் ஹுதா உமர்

சாய்ந்தமருது ஜனாஸா நலன்புரி மக்கள் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டமும் புதிய நிர்வாகத் தெரிவும் நேற்று (11) மாலை பேரவையின் தலைமைக் காரியாலயத்தில் நடைபெற்றது.

ஸுரா சபையின் தலைவர் அஷ்ஷேய்க் ஐ.எல்.எம். ரஹ்பி (ஹிழ்ரி) அவர்களின் தலைமையிலும், ஸுரா சபையின் செயலாளர் எம்.சி.எம். ரிலா அவர்களின் நெறிப்படுத்தலிலும் நடைபெற்ற இந்நிகழ்வு சமய ஆராதனையுடன் ஆரம்பமானது.

சாய்ந்தமருது பிரதேச செயலக எல்லைக்குள் பல சமூக சேவை அமைப்புகள் இருந்தபோதிலும், மக்களின் இறுதிக் கடமையான ஜனாஸா கடமைகளை முறையாக மேற்கொள்ளக்கூடிய அமைப்பு இல்லாத நிலைமையால் ஏற்பட்ட குறைபாடு இப்பேரவையின் உருவாக்கத்தால் நீங்கியுள்ளதாகவும், தேசிய ரீதியில் நன்மதிப்பைப் பெற்ற சேவையை பேரவை வழங்கி வருகிறது.

இதன்போது நடைபெற்ற நிர்வாகத் தெரிவில், 2026ஆம் ஆண்டிற்கான நிர்வாகிகள் பின்வருமாறு தெரிவு செய்யப்பட்டனர்: தலைவராக எஸ்.எம். நசீர், பொதுச் செயலாளராக யூ.கே. காலித்தீன், பொருளாளராக ஏ.எச்.எம். முபின், உப தலைவர்களாக என்.எம். ஜெமின், ஏ.எம். சப்கி, பிரதி தலைவர்களாக ஏ.எல். நியாஸ் ஹாஜி, எம்.சி.எம். ரிலா, உப செயலாளராக எல். நாசர், கணக்கு பரிசோதகராக எச்.எம். அமான் ஹாஜி ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

மேலும், எம்.எம். ஹம்ஸா, ஐ.எல். இக்பால், எம்.ஏ.எம். அனஸ், என்.எம். சிராஜ் மற்றும் எம். பஸ்லுன் ஆகியோர் நிர்வாக சபை உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் சாய்ந்தமருது ஜம்மிய்யத்துல் உலமாவின் செயலாளர் நப்றாஸ் ஹனிபா (ரஹ்மானி), உலமாக்கள், ஊர் பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

No comments: