.jpg)
பாராளுமன்ற குழுத் தலைவர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நாடாளுமன்ற குழு பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அரசியலமைப்பு சபையிலிருந்து விலக மறுத்த சிறீதரனின் முடிவைத் தொடர்ந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இராணுவ அதிகாரி ஒருவருக்கு உயரிய பதவியை வழங்க சிவஞானம் சிறீதரன் ஆதரவளித்து வாக்களித்த நிலையிலேயே அவர் இவ்வாறு பதவி நீக்கம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments: