News Just In

2/27/2026 08:43:00 PM

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்கின்றாரா விஜய்! பரபரப்பு தகவல்

யாழ்ப்பாணத்தை சேர்ந்த மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்கின்றாரா விஜய்! பரபரப்பு தகவல்



நடிகரும் தமிழக வெற்றிகழக தலைவருமான விஜய் இன் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளதாக இந்தியப் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடவுள்ள விஜய் தீவிர அரசியல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றார். விஜய் இன் மனைவி சங்கீதா யாழ்ப்பாணத்தை பின்புலமாக கொண்ட சேர்ந்த லண்டன் வாழ் புலம் பெயர் தமிழராவார்.

லண்டன் வாழ் புலம் பெயர் தமிழரான சங்கீதாவை நடிகர் விஜய் காதலித்து கடந்த 1999 ஆகஸ்ட் 25 அன்று சங்கீதாவை திருமணம் செய்து கொண்டர்.

இவர்களுக்கு ஜேசன் சஞ்ஜை என்ற மகனும், திவ்யா சாஷா என்ற மகளும் உள்ளனர். இதற்கிடையில் கடந்த சில மாதங்களகவே விஜய் – சங்கீதா உறவில் விரிசல் விழுந்திருப்பதாக தகவல்கள் பரவி வந்தன.

இந்த நிலையில் சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இச்சம்பவம் தற்போது தமிழக அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments: