News Just In

2/27/2026 07:55:00 PM

யானையின் தாக்குதலில் பெண் உயிரிழப்பு. இரண்டு பெண்கள் காயம்

யானையின் தாக்குதலில் பெண் உயிரிழப்பு. இரண்டு பெண்கள் காய ம்


(ஏ.எச்.ஏ. ஹுஸைன்)

மட்டக்களப்பு -கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திற்குள் வெள்ளிக்கிழமை(27.02.2026) அதிகாலை உட்புகுந்த காட்டு யானை அட்டகாசம் புரிந்துள்ளது.

வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த பெண்களை எதிர்கொண்டு தாக்கியுள்ளது. தாக்குதலில் 75 வயது மதிக்கதக்க அக்கிராமத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரை பெருநிலப்பரப்பின் எல்லைக் கிராமங்களில இதுவரை காலமாக அட்டகாசம் செலுத்தி வரும் காட்டு யானைகள் தற்போத மட்டக்களப்பு நகர் பகுதி உள்ளிட்ட கரையோரப் பகுதிகயையும் தாக்கி வருகின்றது.

எனவே ஒட்டுமொத்தமாக மட்டக்களப்பு மாவட்டத்தை ஆட்டிப்படைக்கும் காட்டு யானைகளின் தொல்லைகளுக்கு முடிவு காணுமாறு மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.



No comments: