News Just In

2/13/2026 08:19:00 AM

சிறுவர் தொழிலாளரை இல்லாதொழிக்க கல்விச் சீர்திருத்தமே நிரந்தரத் தீர்வு - மஹிந்த ஜயசிங்க சுட்டிக்காட்டு


சிறுவர் தொழிலாளரை இல்லாதொழிக்க கல்விச் சீர்திருத்தமே நிரந்தரத் தீர்வு - மஹிந்த ஜயசிங்க சுட்டிக்காட்டு




சிறுவர் தொழிலாளர் முறைமையை இல்லாதொழிப்பதற்கு கல்வி சீர்திருத்தம் அவசியமென தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

மொரோக்கோவில் நடைபெறும் 6ஆவது சிறுவர் தொழிலாளர் ஒழிப்பு உலகளாவிய மாநாட்டின் போது, பிரதி அமைச்சர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, தற்போதைய அரசாங்கம் புதிய கல்வி சீர்திருத்தங்களை முன்னெடுத்து வருவதாகவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இருப்பினும், இலங்கையில் ஆண்டுதோறும் 10 இற்கும் குறைந்த சிறுவர் தொழிலாளர்கள் பதிவாகியுள்ளதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில், சிறுவர் தொழிலாளர் முறைமையை இல்லாதொழிப்பதற்காக, வீட்டு வருமானம் மற்றும் சமூகப் பாதுகாப்பை வலுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், கல்வி மற்றும் திறன் மேம்பாட்டில் முதலீடு செய்தல் மற்றும் தரமான கல்விக்கான அணுகலை உறுதி செய்தல் குறித்தும் அவதானம் செலுத்தியுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments: