News Just In

2/22/2026 08:40:00 AM

தமிழ்த் தேசிய அரசியலை மோசமாக சிதறடிக்கும் தமிழரசுக் கட்சி விவகாரம்!

தமிழ்த் தேசிய அரசியலை மோசமாக சிதறடிக்கும் தமிழரசுக் கட்சி விவகாரம்இது கட்சிப் பிரச்சினையல்ல - தமிழ்மக்களின் தேசியப் பிரச்சினை


கொழும்பு மைய அரசியல் என்பது, கொழும்பினுடைய பேரினவாத மேலாதிக்கத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மேற்கொள்கின்ற அரசியலாகும். இதற்குப் பதிலாக தாயக மைய அரசியல் கட்டி எழுப்பப்பட வேண்டும் என்பது தான் தமிழ்மக்களினுடைய நீண்டகால வரலாற்றுக் கோரிக்கையாக இருக்கின்றது.

தாயக மைய அரசியலை கீழே ஒடுக்கி கொழும்பு மைய அரசியல் மேலே வருகின்ற சூழல் இன்று ஏற்பட்டிருக்கின்றது. கொழும்பு மைய அரசியலுக்கு ஏற்றவாறு முதலில் கட்சியைக் கொண்டு வருவது பின்னர் மக்களைக் கொண்டு வருகின்றமை என்பது தான் அவர்களின் நோக்கமாகும்.

இது வரலாற்று ரீதியாக மக்களினால் உருவாக்கப்பட்ட ஒரு கட்சி. தமிழரசுக் கட்சி விவகாரம் தனியே ஒரு கட்சிப் பிரச்சினையல்ல. இது தமிழ் மக்களினுடைய தேசியப் பிரச்சினை. தமிழ்த் தேசிய அரசியலை இது மோசமாக சிதறடிக்கப் போகின்றது. இது தொடர்பில் தமிழ்மக்கள் கவனத்துடன் இருக்க வேண்டும் என அரசியல் ஆய்வாளரான சி.அ யோதிலிங்கம் தெரிவித்தார் 

No comments: