News Just In

2/27/2026 06:09:00 AM

யானை–மனித மோதல் மட்டக்களப்பில்..! காரணம் என்ன..!இரா சாணக்கியன்

யானை–மனித மோதல் மட்டக்களப்பில்..! காரணம் என்ன..!




யானை–மனித மோதல் மட்டக்களப்பில்..! காரணம் என்ன..! யானை–மனித மோதல் அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக மகாவலி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக காடுகள் அழிக்கப்பட்டு வருவதை நான் சுட்டிக்காட்டுகிறேன். இதன் விளைவாக காடுகளில் வாழ்ந்த யானைகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து மக்களின் உயிருக்கும் சொத்துக்களுக்கும் பெரும் சேதத்தை ஏற்படுத்தும் நிலை அதிகரித்துள்ளது.

மகாவலி திட்டத்தின் மூலம் தண்ணீர் வருகிறதா இல்லையா என்பது இன்னும் கேள்விக்குறியாக இருக்கலாம். ஆனால் யானைகள் வருவது மட்டும் நிச்சயம். சமீபத்தில் வாழைச்சேனையில் இடம்பெற்ற சம்பவம் இதற்கு தெளிவான சான்றாக உள்ளது.

மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் 25.02.2026. இந்தக் கூட்டங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தாலும், மக்களுக்கு தேவையான முக்கிய பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்வு எட்டப்படாதது கவலைக்கிடமானது. மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன

No comments: