ஜப்பான் நாட்டு பல்கலைக்கழமொன்றின் நிபுணர் குழுவொன்று மட்டக்களப்புக்கு வருகை தந்து மாவட்டச் செயலாளர் அடங்கிய அதிகாரிகள் குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட இடர் முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் ஏ.எஸ்.எம். சியாத்தின் ஏற்பாட்டில் இந்தக் கலந்துரையாடல் புதிய மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜே.எஸ். அருள்ராஜ் தலைமையில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் சமீபத்திய டித்வா புயலினால் ஏற்பட்ட பாதிப்பு, மட்டக்களப்பு வாவியின் நிலைமை தொடர்பான விடயங்கள் ஆராயப்பப்பட்டன.
மட்டக்களப்பு வாவியின் ஆழம் குறைந்துள்ளமை, களப்புப் பகுதி தூர்வாரப்படவேண்யிருப்பது, நீரேந்துப் பிரதேசங்கள் குறைந்து வருதல் ஆகியவை இந்தப் பிரதேசத்தில் மழைப்பருவ காலங்களில் வெள்ளப்பெருக்கிற்கான பிரதான காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
இந் நிகழ்வில் கிழக்கு பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வி. நவநீதன், மாநகரசபை ஆணையாளர் என். தனஞ்செயன் உள்ளிட்ட துறைசார் நிபுணர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரும் பங்குபற்றினர்.

No comments: