News Just In

2/04/2026 06:13:00 PM

மத்தியமுகாம் அல் மதரஸத்துல் முஹம்மதிய்யா மற்றும் சாளம்பைக்கேணி நூரானியா மதரஸாக்களின் பரிசளிப்பு விழா

 மத்தியமுகாம் அல் மதரஸத்துல் முஹம்மதிய்யா மற்றும் சாளம்பைக்கேணி நூரானியா மதரஸாக்களின் பரிசளிப்பு விழா



நூருல் ஹுதா உமர்
மத்தியமுகாம் அல் மதரஸத்துல் முஹம்மதிய்யா மற்றும் சாளம்பைக்கேணி நூரானியா மதரஸா ஆகியவற்றின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (04) சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் மதரஸா மாணவர்களின் கல்வி, ஒழுக்கம் மற்றும் மத அறிவு வளர்ச்சியை பாராட்டும் வகையில் சிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் கலந்து கொண்ட முக்கிய அதிதிகள், மத கல்வியின் முக்கியத்துவம், இளம் தலைமுறையில் இஸ்லாமிய பண்புகள் மற்றும் ஒழுக்கத்தை வளர்ப்பதன் அவசியம் குறித்து உரையாற்றினர்.
மேலும், மாணவர்களால் வழங்கப்பட்ட குர்ஆன் ஓதல், நஸீத் மற்றும் பண்பாட்டு நிகழ்ச்சிகள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தன. இந்நிகழ்ச்சிகள் விழாவிற்கு மேலும் சிறப்பை சேர்த்தன.
நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர்களான நளீர் பௌண்டஷன் தலைவர் ஏ. நளீர், எம்.பி. நவாஸ், மத்தியமுகாம் விகாராதிபதி, நாவிதன்வெளி பிரதேச சபை முன்னாள் உப தவிசாளர் ஏ.கே.அப்துல் சமட், மத அறிஞர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் சமூகப் பிரமுகர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

No comments: