ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இருந்து டெல்லிக்கு நோயாளியை ஏற்றிச் சென்ற ஏர் ஆம்புலன்ஸ் விபத்துக்குள்ளானதில், அதில் பயணம் செய்த 7 பேரும் உயிரிழந்தனர். இந்த சோகம் விலகுவதற்குள் விபத்தில் உயிரிழந்த நோயாளியின் குடும்பத்தினர், ஏர் ஆம்புலன்ஸை வாடகைக்கு எடுக்க ரூ.8 லட்சம் கடன் வாங்கியிருந்த துயரமும் தெரியவந்துள்ளது.
ஜார்க்கண்டின் சத்ரா மாவட்டத்தில் இருந்து நேற்று இரவு ஏர் ஆம்புலன்ஸ் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் தீக்காயத்தால் கடும் பாதிப்புக்குள்ளான சஞ்சய், அவரது மனைவி மற்றும் உறவினர் உயிரிழந்தனர். மேலும், டெல்லியைச் சேர்ந்த சார்ட்டர்ட் ரெட்பேர்ட் ஏர்வேஸால் இயக்கப்படும் பீச்கிராஃப்ட் சி90 விமானத்தின் இரண்டு விமானிகள், ஒரு மருத்துவர் மற்றும் ஒரு துணை மருத்துவ நிபுணர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். மொத்த உயிர்ப்பலி 7.
இந்த விபத்து குறித்து பேசிய உயிரிழந்த சஞ்சய்யின் சகோதரர் அஜய், “சஞ்சய்யின் சிகிச்சைக்காக சொத்து மற்றும் நிலத்தை விற்க எங்கள் குடும்பம் நினைத்தது. பின்னர் எங்கள் குடும்பத்தினர் கடன் வாங்கி, நண்பர்கள் மற்றும் நலம் விரும்பிகளிடமிருந்து பணத்தை பெற்று டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கான செலவையும், ஏர் ஆம்புலன்ஸ் வாடகையையும் ஏற்பாடு செய்தோம். இதில் ஏர் ஆம்புலன்ஸுக்காக ரூ.8 லட்சம் கடன் வாங்கியிருந்தோம்” என்றார்.
ஜார்கண்ட் மாநிலம் லதேஹர் பகுதியை சேர்ந்த சஞ்சய், கடந்த திங்கட்கிழமை சந்துவாவில் உள்ள அவரது ஹோட்டலில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்தார். அவரது உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்ததால், குடும்பத்தினர் அவரை உயர்சிகிச்சைக்காக புதுடெல்லியில் உள்ள சர் கங்கா ராம் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர்.
இதற்காக ஏர் ஆம்புலன்சின் சஞ்சய், அவரது மனைவி அர்ச்சனா மற்றும் அவரது உறவினர் துருவ் ஆகியோர் சென்றனர். இவர்கள் மூவரும் உயிரிழந்துவிட்டனர். மேலும், விமானி கேப்டன் விவேக் விகாஸ் பகத் மற்றும் துணை விமானி கேப்டன் சவ்ராஜ்தீப் சிங், மருத்துவர் விகாஸ் குமார் குப்தா மற்றும் துணை மருத்துவர் சச்சின் குமார் மிஸ்ரா ஆகியோரும் உயிரிழந்தனர்.

No comments: