News Just In

2/27/2026 08:02:00 PM

ஏப்ரல் 01ம் திகதி வரை கற்றல் செயற்பாடுகளை சம்மாந்துறை தனியார் கல்வி நிலையங்கள் மேற்கொள்ள வேண்டாம்

ஏப்ரல் 01ம் திகதி வரை கற்றல் செயற்பாடுகளை சம்மாந்துறை தனியார் கல்வி நிலையங்கள் மேற்கொள்ள வேண்டாம் : தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் வேண்டுகோள்

நூருல் ஹுதா உமர்
சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களின் கல்விச் செயற்பாடுகளை நான்கு வாரங்களுக்கு நிறுத்துமாறு சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடந்து முடிந்த க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு ஓய்வை வழங்கும் நோக்கில், ஏப்ரல் 01ஆம் திகதி வரை அவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளை தனியார் கல்வி நிலையங்களில் மேற்கொள்ள வேண்டாம் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் திகதி சம்மாந்துறை பிரதேச சபை, வலயக் கல்வி அலுவலகம், நம்பிக்கையாளர் சபை, தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள் மற்றும் சமூக சேவை அமைப்புகள் இணைந்து எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

No comments: