ஒரு பௌத்தர் கூட வாழாத இடத்தில் விகாரையை கட்டி அந்த விகாரைக்கு பஸ்களில் ஆட்களை அழைத்துச் சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட போது ஜனாதிபதி அனுரகுமார வாயை திறந்துள்ளார் !சாணக்கியன் MP
ஒரு பௌத்தர் கூட வாழாத இடத்தில் விகாரையை கட்டி அந்த விகாரைக்கு பஸ்களில் ஆட்களை அழைத்துச் சென்று அங்கு போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்கு தீ வைக்க முயற்சித்த போது கடந்த கால ஆட்சியாளர்கள் வாயை மூடிக்கொண்டிருந்தார்கள் ஆனால், ஜனாதிபதி அனுரகுமார வாயை திறந்துள்ளார். அதற்கு நான் நன்றி கூறுகின்றேன்
இந்த அரசாங்கம் இனவாத அரசாங்கம் என தொடர்ச்சியாக கூறி வருகிறோம். இதற்கு பல விடயங்களை உதாரணமாக கூற முடியும். நாட்டில் உள்ள சகல பல்கலைக்கழகங்களிலும் ' பல்கலைக்கழக கவுன்சில்' உள்ளது.தமிழர்கள் அதிகளவில் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தில் கிழக்கு பல்கலைக்கழகத்தில் ' பல்கலைக்கழக கவுன்சில்' உறுப்பினர்கள் கடந்த அரசாங்கத்தில் 8 தமிழர்கள், 5 முஸ்லிம்கள், 2 சிங்களவர்கள் என்ற அடிப்படையில் நியமிக்கப்பட்டார்கள்.
இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் 5 தமிழர்கள், 3 முஸ்லிம்கள், 7 சிங்களவர்கள் என்ற அடிப்படையில் நியமனம் வழங்கப்பட்டுள்ளது
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்ற பல்கலைக்கழகங்கள் திருத்த சட்டமூலம் இரண்டாம் மதிப்பீட்டின் மீதான விவாதத்தில் சாணக்கியன் MP உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
No comments: