முன்னாள் தமிழரசுக் கட்சியின் தலைவர் அமரர் சி.மு. இராசமாணிக்கம் அவர்களின் ஜனன தின நினைவேந்தல் நிகழ்வு பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.
தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் அவர்களின் பாட்டனார் அமரர் சி.மு. இராசமாணிக்கம் (முன்னாள் தலைவர் – இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்) அவர்களின் 113வது ஜனன தின நினைவேந்தல் நிகழ்வு 25-01-2026 (ஞாயிற்றுக்கிழமை) காலை 10.00 மணிக்கு களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள சி.மு. இராசமாணிக்கம் ஞாபகார்த்த மண்டபத்தில் மிகவும் பிரமாண்டமாகவும் சிறப்பாகவும் நடைபெற்றது.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் பொதுச் செயலாளர் M A சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர்கள் நகர மற்றும் பிரதேசகிளை முதல்வர் தவிசாளர்கள் கட்சி உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள், பெருந்திரளான மக்கள் இளைஞர்கள் மற்றும் ஊர்ப் பெருமக்கள் கலந்துகொண்டு நிகழ்வை மிகுந்த உற்சாகத்துடனும் மரியாதையுடனும் சிறப்பித்தனர். அமரரின் அரசியல் பயணம், தமிழர் நலனுக்காக அவர் செய்த அர்ப்பணிப்பு சேவைகள் மற்றும் அவரது மக்கள் நேசம் அனைவராலும் நினைவுகூரப்பட்டதுடன், நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.
No comments: