News Just In

1/10/2026 12:41:00 PM

சீனாவுக்குப் பயணிக்கவுள்ள இலங்கையின் மேயர்கள்!

சீனாவுக்குப் பயணிக்கவுள்ள இலங்கையின் மேயர்கள்!




யாழ்ப்பாணம் மாநகர சபையின் பிரதி மேயர் இம்மானுவேல் தயாளன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 26 ஆம் திகதி சீனாவுக்குப் பயணிக்கவுள்ளார்.

பெப்ரவரி 6 ஆம் திகதிவரை அங்கு நடைபெறும் நிகழ்வு ஒன்றில் கலந்துகொள்ளவுள்ளார்.

டிஜிட்டல் பொருளாதார பரிபாலனம் மற்றும் தலைமைத்துவ ஆளுமையைக் கட்டியெழுப்பும் சர்வதேச பரிமானங்களுக்கான நிகழ்வுகள் சீனாவில் இடம்பெறவுள்ள நிலையில் அதில் கலந்துகொள்வதற்காக அவர் சீனாவுக்குப் பயணமாகவுள்ளார்.

ஐக்கிய நாடுகள் கல்வி நிறுவகத்தால் உலக டிஜிட்டல் பொருளாதார நகரங்கள் கூட்டமைப்பின் ஒத்துழைப்புடன் இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் இலங்கையில் இருந்து மேயர்கள், பிரதி மேயர்கள், ஆணையாளர்கள், செயலாளர்கள், பணிப்பாளர்கள் என 19 பேர் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: