“கொன்ட ரஞ்சி ” டுபாய் பொலிஸாரிடம் குடும்பத்துடன் சிக்கினார்!
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கொன்ட ரஞ்சி ” என்று அழைக்கப்படும் ரஞ்சித் குமார என்பவர் டுபாயில் வைத்து தனது குடும்பத்துடன் அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
“கொன்ட ரஞ்சி ” டுபாயிலிருந்து இத்தாலிக்கு குடும்பத்துடன் தப்பிச் செல்ல முயன்ற போதே அந்நாட்டு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
“கொன்ட ரஞ்சி ” என்பவருடன் அவரது மனைவியும் பிள்ளைகளும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கொன்ட ரஞ்சி ” என்பவர் முன்னாள் அமைச்சர் மங்கல சமரவீரவின் செயலாளரை கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடையவர் ஆவார்.
தற்போது “கொன்ட ரஞ்சி ” டுபாய் பொலிஸில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
1/10/2026 03:32:00 PM
“கொன்ட ரஞ்சி ” டுபாய் பொலிஸாரிடம் குடும்பத்துடன் சிக்கினார்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments: