விமர்சனம் இல்லாவிட்டால் நாம் வளர முடியாது. கட்சியின் சில உறுப்பினர்கள் இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபடலாம். ஆனால் உறுப்பினர்களிடம் நாம் இவ்வாறான செயற்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ளச் சொல்லியுள்ளோம்.
இது ஜனநாயகக் கட்சி என்ற ரீதியில் விமர்சனங்களை முன்வைப்பதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. நேற்றைய அரசியற்குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தொடர்பில் எவ்வித கருத்துகளும் தெரிவிக்கப்படவில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலையில் முகநூல்களின் பரப்பப்படுகின்ற கட்சிக்கெதிரான கருத்துகள் தொடர்பில் மாவட்டத் தலைவரால் இவற்றைக் கட்டுப் படுத்த முடியாது. திட்டமிட்ட ஒரு குழுவினால் இச்செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.
ஆனால் அரியநேத்திரன் அவர்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக மீண்டும் அறிவித்தல் கடிதம் மாவட்டக் கிளையினூடா அனுப்புவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொதுவான நிகழ்வுகளுக்கு அவர் வரலாம் போகலாம் அதைப் பற்றி எதுவும் இல்லை.
ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் என்ற அடிப்படையிலேயே அவர் கருதப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. அரியநேத்திரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பாக அவருக்குக் கடிதம் கிடைக்கவில்லை என்ற கதையெல்லாம் பரவுகின்றது.
அது அவ்வாறு அல்ல ஒருவருடத்திற்கு மேலாக நீக்கப்பட்டு விட்டார். மட்டக்களப்பு கட்சி உறுப்பினர்கள் என்ற வகையிலே கட்சியின் தீர்மானமே எமக்கு முக்கியம். இதனை வைத்துக் கொண்டு சிலர் அரசியற் குழப்பங்களை கட்சிக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிக்கின்றார்கள்.
கட்சியின் நிகழ்வுகளுக்கு அவர் வந்து போகலாம் அவரைத் தடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை. ஆனால் கட்சியினால் தயார்ப்படுத்தப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் சென்று அவரை அழைத்து கௌரவப்படுத்த முயற்சியெடுத்ததாகச் சிலர் கருதுகின்றார்கள். எனவே இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் நடக்காமல் இருக்க வேண்டும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது- என்றார்.

இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மாவட்டக் கிளை, தொகுதிக் கிளை, உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்கள், உபதலைவர்கள், வாலிபர் முன்னணி போன்றவற்றின் உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் மட்டக்களப்பு உப்போடையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் இ.சிறிநாத்தின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்றது.
இதன்போது கலந்துரையாடப்பட்ட விடயங்களை ஊடகங்களுக்குத் தெரிவிக்கையில் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

No comments: