News Just In

1/02/2026 10:37:00 AM

மட்டக்களப்பு நகரின் பிரதான வீதியோரம் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு நகரின் பிரதான வீதியோரம் இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்




புத்தாண்டின் தொடக்கத்திலேயே மட்டக்களப்பு நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து தெரியவருவதாவது: இன்று (02-01-2026) அதிகாலை மட்டக்களப்பு நகரின் பிரதான வீதியோரம் அமைந்துள்ள ஒரு கடைத்தொகுதிக்கு முன்பாக, இளைஞர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டுள்ளார்.

அதிகாலையில் வீதியால் சென்ற பொதுமக்கள் இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து காவல்துறையினருக்கு தகவல் வழங்கினர்.
பின்னர் உயிரிழந்த இளைஞன் அக்கரைப்பற்றைச் சேர்ந்த 25 வயதுடையவர் என முதற்கட்ட விசாரணைகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது.

No comments: