News Just In

1/02/2026 10:06:00 AM

தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வு...! வலுக்கும் எதிர்ப்பு

தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வு...! வலுக்கும் எதிர்ப்பு: 


தையிட்டி விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக விகாரைக்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் 11 உறுப்பினர்களுக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தினால் அழைப்பு கட்டளை அனுப்பபட்டுள்ளது.

மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் பலாலி காவல்துறையினர் தாக்கல் செய்த வழக்கின்படி நீதிமன்ற பதிவாளரால் அழைப்புக் கட்டளை அனுப்பப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஐந்தாம் திகதி பிரதேச சபை உறுப்பினர்கள் 11 பேரையும் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்புக் கட்டளை வழங்கப்பட்டது.

கடந்த டிசம்பர் 21ம் திகதி தையிட்டி விகாரையின் முன்பாக விகாராதிபதியின் பதவி உயர்வுக்கு எதிராக வலிகாமம் வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்றையதினம் போராட்டத்தில் ஈடுபட வலிகாமம் வடக்கு பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்ட 29 பேருக்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் கட்டளை பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: